சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
1329 - அறப்பாவை அத்தற்கு (திருப்பூவணம்) Songs from this thalam திருப்பூவணம் 1331 - பந்தப்பொற் பார
1329 திருப்பூவணம் திருப்புகழ் ( )
அறப்பாவை அத்தற்கு
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனத்தான தத்தத் ...... தனதானா
தனத்தான தத்தத் ...... தனதானா
அறப்பாவை அத்தற் ...... கருள்பாலா
அளித்தாது வெட்சித் ...... திருமார்பா
குறப்பாவை அற்பிற் ...... புணர்வோனே
குலத்தேவ வர்க்கப் ...... பரிபாலா
மறப்பாத கத்துற் ...... றுழல்வேனோ
மலர்த்தாள்வ ழுத்தக் ...... க்ருபையீவாய்
சிறப்பான முத்திக் ...... கொருவாழ்வே
திருப்பூவ ணத்திற் ...... பெருமாளே.
......... உரை .........
சிறப்பான முத்தியை அளிக்கக் கூடிய பூவணத்தில் எழுந்தருளியுள்ள
பெருமானே! முருகா! நீ அறப்பாவையான தேவசேனையின் இனத்தைச்
சார்ந்த தேவர்களுக்கு அருளுகின்றவன். எப்போதும் வெற்றியை
அளிக்கக்கூடிய வெட்சி மாலையை மார்பினில் அணிந்தவன். குறப்
பாவையாகிய வள்ளியின் அன்பிற்கு அடிமையானவன். தேவர்களின்
குலம் பெருக பரிபாலனம் செய்வோன். இவ்வளவு உயரிய நீ, மிகக் கொடிய
பாவங்கள் செய்து மாபாதகத்துள் உழலும் என்னைக் காத்து மலர்போன்ற
உனது தாளை வணங்கிட அருள் செய்வாய்.
Easy Version:

Add (additional) Audio/Video Link
1
Similar songs:
தனத்தான தத்தத் ...... தனதானா
தனத்தான தத்தத் ...... தனதானா
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song